Home » உலகச் செய்திகள் » வரவு செலவுத்திட்டம் கடும் தோல்வியியை சந்திக்கும் என்கிறார் விமல் வீரவன்ச

வரவு செலவுத்திட்டம் கடும் தோல்வியியை சந்திக்கும் என்கிறார் விமல் வீரவன்ச

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிகளைக் கொண்ட திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

👤 Sivasankaran6 March 2019 3:23 PM GMT
வரவு செலவுத்திட்டம் கடும் தோல்வியியை சந்திக்கும் என்கிறார் விமல் வீரவன்ச
Share Post

இலங்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத்திட்டம் கடும் தோல்வியைச் சந்திக்குமென்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கொழும்பில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

"இம்முறை இந்த அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நிச்சயமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும்.

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிகளைக் கொண்ட திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

மேலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு வருமானத்தினை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணப்படவில்லை.

எனவே இந்த வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடித்து தேர்தலுக்கு செல்வதே நாட்டின் அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வு காணும் தீர்வாக அமையும்" என்றும் பேசினார்.