Home » உலகச் செய்திகள் » பாகிஸ்தானியர்களின் விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா

பாகிஸ்தானியர்களின் விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா

அமெரிக்காவிற்கு விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது.

👤 Sivasankaran6 March 2019 4:33 PM GMT
பாகிஸ்தானியர்களின் விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா
Share Post

இந்தியாவில் ஏற்பட்ட புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கான விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உலகநாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது.

இதன்படி அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் பாகிஸ்தானியர்களின் வீசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வீசா கால அளவை தற்பொழுது 3 மாதமாக மட்டுப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.