Home » உலகச் செய்திகள் » அல்ஜீரிய ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

அல்ஜீரிய ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

ஜனாதிபதி அப்துலசீஸ் 5 வது முறையாக மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்ததால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

👤 Sivasankaran8 March 2019 4:31 PM GMT
அல்ஜீரிய ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்
Share Post

அல்ஜிரியாவில் தற்போது ஜனாதிபதியாக இருந்து வருபவர் அப்துலசீஸ் போடேபிளிகா. பொதுமக்கள் அனைவரும் இவரை பதவி விலக வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் கலந்துக் கொண்டனர். பலத்த பொலிஸ் பாதுகாப்பும் இருந்தது.

அல்ஜீரியாவில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடப்பது என்பது அரிதாகவே காணப்படக்கூடியவை. 81 வயதான அல்ஜீரிய ஜனாதிபதி அப்துலசீஸ் 5 வது முறையாக மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்ததால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அல்ஜீரிய ஜனாதிபதி அப்துலசீஸ் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரால் நாட்டை வழி நடத்த இயலாத நிலை என அல்ஜீரிய மக்கள் தெரிவிக்கின்றனர்.