Home » உலகச் செய்திகள் » காஷ்மீர் செல்ல வேண்டாமென்று அமெரிக்கா தன் மக்களுக்கு அறிவுறுத்தல்

காஷ்மீர் செல்ல வேண்டாமென்று அமெரிக்கா தன் மக்களுக்கு அறிவுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் இருந்து வருவதால், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அமெரிக்கர்கள்...

👤 Sivasankaran9 March 2019 4:30 PM GMT
காஷ்மீர் செல்ல வேண்டாமென்று அமெரிக்கா தன் மக்களுக்கு அறிவுறுத்தல்
Share Post

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் இருந்து வருவதால், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரையும், அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா தளங்கள், போக்குவரத்து முனையங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.