Home » உலகச் செய்திகள் » வின்ட்சர் பகுதிக்கு சுற்றுச் சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை

வின்ட்சர் பகுதிக்கு சுற்றுச் சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை

பலத்த உறைபனி மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

👤 Sivasankaran10 March 2019 3:57 PM GMT
வின்ட்சர் பகுதிக்கு சுற்றுச் சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை
Share Post

கனடிய சுற்றுச் சூழல் திணைக்களத்தினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வின்ட்சர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை பலத்த உறைபனி மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மணிக்கு 70-லிருந்து 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.