Home » உலகச் செய்திகள் » நைஜீரியாவில் பரவி வரும் லசா காய்ச்சல்

நைஜீரியாவில் பரவி வரும் லசா காய்ச்சல்

கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

👤 Sivasankaran10 March 2019 4:59 PM GMT
நைஜீரியாவில் பரவி வரும் லசா காய்ச்சல்
Share Post

தற்போது நைஜீரியாவில் மீண்டும் லசா காய்ச்சல் பரவி வருகிறது. லசா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.

லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப் பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும், எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.