Home » உலகச் செய்திகள் » வெனிசுலாவின் அரசியல் பிரச்சினையால், நோயாளிகள் உயிரிழப்பு

வெனிசுலாவின் அரசியல் பிரச்சினையால், நோயாளிகள் உயிரிழப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன.

👤 Sivasankaran11 March 2019 2:25 AM GMT
வெனிசுலாவின் அரசியல் பிரச்சினையால், நோயாளிகள் உயிரிழப்பு
Share Post

வெனிசுலாவில் அரசியல் குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து உள்ளது. நிகோலஸ் மதுரோ அதிபராக இருக்கிறார். இவருக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் ஜுயான் கொய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்து கொண்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் வெனிசுலாவில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. மின்சார உற்பத்தியிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன. குறிப்பாக மேற்கு மாகாணங்களான பரினாஸ், தசீரா, ஷூலியா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லை. கராகஸ், மிராண்டா, வர்காஸ் ஆகிய மாகாணங்களில் மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது. இங்குள்ள சர்வதேச விமான நிலையங்கள், உள்ளூர் மெயின் விமான நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மின் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் கடந்த 2 நாட்களில் 15 சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த மோசமான அரசியல் சூழ்நிலை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.