Home » உலகச் செய்திகள் » விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 18 கனடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனடிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran12 March 2019 5:09 PM GMT
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
Share Post

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 18 கனடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனடிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் துக்கமடைந்தேன். கனடியர்கள் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.