Home » உலகச் செய்திகள் » பெரு நாட்டின் பிரதமரானார் பிரபல நடிகர் சால்வடார் டெல் சோலார்

பெரு நாட்டின் பிரதமரானார் பிரபல நடிகர் சால்வடார் டெல் சோலார்

பிரதமர் சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

👤 Sivasankaran12 March 2019 5:17 PM GMT
பெரு நாட்டின் பிரதமரானார் பிரபல நடிகர் சால்வடார் டெல் சோலார்
Share Post

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது பெரு. பெரு நாட்டின் அதிபராக மார்ட்டின் விஸ்காரா பதவி வகித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டில் பெரு நாட்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை பெற்ற சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவியேற்றார்.

இவரது மந்திரிசபையில் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்த சால்வடார் டெல் சோலார், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரி-க்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை 2017-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார்.

பெரு நாட்டின் பிரபல வழக்கறிஞரும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலாரின் கோரிக்கைக்கு ஏற்ப முன்னாள் அதிபருக்கு அளிக்கப்பட்ட பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் ராஜினாமா செய்தார். எனவே பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான சால்வடார் டெல் சோலார்(வயது 48) புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார்.