Home » உலகச் செய்திகள் » வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத் திணைக்களம்

வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத் திணைக்களம்

அவசர மருத்துவ உதவிகளுக்காக 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

👤 Sivasankaran13 March 2019 5:27 PM GMT
வடக்கு மக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத் திணைக்களம்
Share Post

வடக்கில் கடுமையான வெப்ப சூழல் நிலவி வருகின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படலாமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மதிய நேரங்களில் வெயிலில் வேலை செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

அவசர மருத்துவ உதவிகளுக்காக 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.