Home » உலகச் செய்திகள் » சத்ரபதி ரெயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது

சத்ரபதி ரெயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது

பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

👤 Sivasankaran14 March 2019 5:47 PM GMT
சத்ரபதி ரெயில் நிலையம் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது
Share Post

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படுவது சத்ரபதி ரெயில் நிலையம்.

இன்று மாலை வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன்கீழ் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.