Home » உலகச் செய்திகள் » மருத்துவ விடுப்பில் செல்கிறார் விமானி அபிநந்தன்

மருத்துவ விடுப்பில் செல்கிறார் விமானி அபிநந்தன்

மூன்று நாட்களுக்கு பின், பல நாடுகள் வலியுறுத்தி கூறியதால், அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

👤 Sivasankaran14 March 2019 6:52 PM GMT
மருத்துவ விடுப்பில் செல்கிறார் விமானி அபிநந்தன்
Share Post

விமானப் படை வீரர் அபிநந்தனிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து அவருக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பிப்ரவரி 27ல் பாகிஸ்துன் விமானத்தை போர் விமானத்தில் துரத்திச் சென்ற இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினர். மூன்று நாட்களுக்கு பின், பல நாடுகள் வலியுறுத்தி கூறியதால், அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தனுடன் அதிகாரிகள் நேற்று வரை (ஏப்ரல் 14) விசாரணைகளை முடித்தனர். இதையடுத்து அபிநந்தனுக்கு சில வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.