Home » உலகச் செய்திகள் » ஐரோப்பாவிற்கு பயணிக்க கனடியர்களுக்கு புதிய பயணக்கட்டுப்பாடு

ஐரோப்பாவிற்கு பயணிக்க கனடியர்களுக்கு புதிய பயணக்கட்டுப்பாடு

கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா அல்லது வர்த்தக நோக்கத்திற்காக விசா இன்றி 90 நாட்களுக்கு ஐரோப்பாவிற்கு பயணிக்கலாம்.

👤 Sivasankaran15 March 2019 3:38 PM GMT
ஐரோப்பாவிற்கு பயணிக்க கனடியர்களுக்கு புதிய பயணக்கட்டுப்பாடு
Share Post

ஐரோப்பாவிற்கு பயணிப்பதற்கு எதிர்வரும் ஆண்டுகளில் விசேட விண்ணப்பப் படிவமொன்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென்று கனடியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமானது 'ஐரோப்பிய சுற்றுலாத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு' என்ற புதிய ஆன்லைன் செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

விசா இன்றி ஐரோப்பாவை அணுகக்கூடிய குடிமக்களின் பாதுகாப்புச் சோதனைகளை பலப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா அல்லது வர்த்தக நோக்கத்திற்காக விசா இன்றி 90 நாட்களுக்கு ஐரோப்பாவிற்கு பயணிக்கலாம்.ஆனால், இந்த புதிய திட்டத்திற்கமைய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு முன்னர் கனடியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் பாதுகாப்பு அனுமதிக்காக விண்ணப்பித்து, கட்டாய கட்டணமொன்றையும் செலுத்த வேண்டியது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.