Home » உலகச் செய்திகள் » நியூசிலாந்து மசூதிகளில் திடீர் துப்பாக்கி சூடு

நியூசிலாந்து மசூதிகளில் திடீர் துப்பாக்கி சூடு

50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

👤 Sivasankaran15 March 2019 4:59 PM GMT
நியூசிலாந்து மசூதிகளில் திடீர் துப்பாக்கி சூடு
Share Post

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே உயிருக்கு பயந்தபடியே ஓடி வந்தனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான்.

இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 40 பேர் உயிரிழந்ததாக பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்தார். 50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.