Home » உலகச் செய்திகள் » மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலியர் நீதிமன்றத்தில் ஆஜர்

மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலியர் நீதிமன்றத்தில் ஆஜர்

பிரென்டன் டாரன்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை.

👤 Sivasankaran16 March 2019 3:30 PM GMT
மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலியர் நீதிமன்றத்தில் ஆஜர்
Share Post

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள நேற்று (வெள்ளிக்கிழமை) இருவேறு மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் கைது செய்யப்பட்டார். கொலை குற்றம் சாட்டப்பட்ட அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது பிரென்டன் டாரன்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதுவரை பிரென்டனை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டனர்.