Home » உலகச் செய்திகள் » ஐபிஎல் டிக்கெட் வாங்க வந்தவர்களை தடியடி செய்த பொலிசார்

ஐபிஎல் டிக்கெட் வாங்க வந்தவர்களை தடியடி செய்த பொலிசார்

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ஆம் திகதி தொடங்க உள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால்,...

👤 Sivasankaran16 March 2019 4:20 PM GMT
ஐபிஎல் டிக்கெட் வாங்க வந்தவர்களை தடியடி செய்த பொலிசார்
Share Post

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ஆம் திகதி தொடங்க உள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை ஐபிஎல் தொடருக்கான அட்டவணை முதல் இரு வாரங்களுக்கு மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 23ம் தேதி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்க்கும் ஆசையில் டிக்கெட் வாங்க மக்கள் திரளாக காத்திருந்தனர்.

போட்டிக்கு 1300 ரூபாய், 2500 ரூபாய் 5000 ரூபாய், 6500 ரூபாய் கட்டண வகைகள் உள்ளன. மொத்தம் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

டிக்கெட்டை வாங்க அதிகமான ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை கட்டுப்படுத்த பொலிசார் லேசான தடியடி நடத்தினர். கூட்டத்தில் இருந்தவர்களை ஒழுங்குப்படுத்தி விரைவாக டிக்கெட் வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர்.