Home » உலகச் செய்திகள் » நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செயலி

நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செயலி

திடீரென்று வரும் நிலநடுக்கத்தினால் மக்கள் படும் அவதிகளுக்கு அளவே இல்லை.

👤 Sivasankaran17 March 2019 12:56 PM GMT
நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் செயலி
Share Post

நிலநடுக்கத்தை கண்டு உணரும் செயலி ஒன்று புதிதாக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Shake Alert LA என பெயரிடப்பட்டு உள்ள இந்த செயலியை, லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண நிர்வாகம் அறிமுகம் செய்து உள்ளது.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நொடிகளுக்கு முன்னர் மின்னஞ்சலிலோ, செய்தி அறிவிப்பாகவோ இந்த செயலி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். இந்த செயலி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திடீரென்று வரும் நிலநடுக்கத்தினால் மக்கள் படும் அவதிகளுக்கு அளவே இல்லை. பொதுவாக அனைத்து நாட்டினரும் இந்த செயலியை விரும்புவார்கள் என்றே தெரிகிறது.