Home » உலகச் செய்திகள் » முஸ்லிம் சமூகத்தினருடன் கனடிய பிரதமர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்தினருடன் கனடிய பிரதமர் சந்திப்பு

கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.

👤 Sivasankaran18 March 2019 5:25 PM GMT
முஸ்லிம் சமூகத்தினருடன் கனடிய பிரதமர் சந்திப்பு
Share Post

கனடிய பிரதமருக்கும், முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஒட்டாவாவில் நடந்தது. நியூசிலாந்து, கிறைஸ்ட்சேச்சில் நடந்த அர்த்தமற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் சமூகத்தினருடனான தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வழிபாட்டாளர்கள் நிறைந்த நியூசிலாந்தின் இரு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.