Home » உலகச் செய்திகள் » லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்

லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்

தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்

👤 Sivasankaran4 Sep 2019 4:51 PM GMT
லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்
Share Post

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிராக பாகிஸ்தானியர்கள் சிலர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை இந்திய மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்தநிலையில், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திடீரென்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய அரசாங்கத்திற்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் காணொளி பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மாநகர முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.