Home » உலகச் செய்திகள் » கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran21 May 2020 2:29 PM GMT
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
Share Post

இன்றைய தினம் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிறிலங்காவில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 1030 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 417 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.