Home » உலகச் செய்திகள் » ஸ்பெயினில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

ஸ்பெயினில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

இந்த சட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

👤 Sivasankaran21 May 2020 2:43 PM GMT
ஸ்பெயினில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
Share Post

ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயின், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகள் இப்போது முகக்கவசம் அணிவது பொது போக்குவரத்தில் அவசியமாகிவிட்டது என்ற போதிலும், இந்த அவசியத்தை ஸ்பெயின் கட்டாயமாக்கியுள்ளது.

ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் மட்டுமே சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். இந்த சட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது நாடாளுமன்ற உரையில் கூறியதாவது, 'குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் (6.5 அடி) பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க முடியாதபோது, வீதிகளிலும், திறந்தவெளிகளிலும், பொது பயன்பாட்டின் எந்தவொரு மூடிய இடத்திலும் முகக்கவசம் பயன்படுத்துவது கட்டாயமாக இருக்கும்

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றாலும், மூன்று முதல் ஐந்து வயது வரையிலான அனைவரும் அவற்றை அணிய பரிந்துரைக்கப்படுகிறார்கள்' என கூறினார்.

பிரதமரின் கூற்றுப்படி, 45 மில்லியன் மக்கள் இப்போது முகக்கவசம் அணிய வேண்டியிருக்கும், மேலும் 1.3 மில்லியன் பேர் வலியுறுத்தப்படுவார்கள். ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துவரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும், சமூக விலகள் விதிகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது.