Home » உலகச் செய்திகள் » கையிருப்பு கச்சா எண்ணெயை விடுவிப்பதாக ஜப்பான் அறிவிப்பு

கையிருப்பு கச்சா எண்ணெயை விடுவிப்பதாக ஜப்பான் அறிவிப்பு

கச்சா எண்ணெய் நுகர்வு நாடுகளை நாடிய அமெரிக்கா, தங்கள் சேமிப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.

👤 Sivasankaran25 Nov 2021 2:30 PM GMT
கையிருப்பு கச்சா எண்ணெயை விடுவிப்பதாக ஜப்பான் அறிவிப்பு
Share Post

கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 80 புள்ளி 40 டாலர்களாக உயர்ந்தது.

விலையை குறைக்கும் நடவடிக்கையாக இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட கச்சா எண்ணெய் நுகர்வு நாடுகளை நாடிய அமெரிக்கா, தங்கள் சேமிப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.

ஜப்பானும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க, கையிருப்பில் இருந்து குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய்யை விடுவிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் விடுவிக்கப்படும் கச்சா எண்ணெயின் அளவை அறிவிக்கவில்லை.