Home » உலகச் செய்திகள் » வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - 13 தொழிலாளிகள் பலி

வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - 13 தொழிலாளிகள் பலி

வங்காளதேசம் நாட்டில் உள்ள கம்மிலா மாவட்டத்துக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தின் வழியாக நிலக்கரி...

👤 Sivasankaran25 Jan 2019 4:15 PM GMT
வங்காளதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - 13 தொழிலாளிகள் பலி
Share Post

வங்காளதேசம் நாட்டில் உள்ள கம்மிலா மாவட்டத்துக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தின் வழியாக நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

சாலையில் உள்ள ஒரு குறுகிய வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்தது. கவிழ்ந்தவாறு புரண்டுச் சென்று அருகாமையில் உள்ள ஒரு தற்காலிக குடியிருப்பில் மோதியது.

அந்த தற்காலிக குடியிருப்பில் சுமார் 15 செங்கல் சூளை தொழிலாளிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். லாரி மோதியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.