Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற் - 2வது முறையாக தீர்மானம் தோல்வி

பிரெக்ஸிற் - 2வது முறையாக தீர்மானம் தோல்வி

ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

👤 Sivasankaran13 March 2019 5:22 PM GMT
பிரெக்ஸிற் - 2வது முறையாக தீர்மானம் தோல்வி
Share Post

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான 'பிரெக்ஸிட்' நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு தடைகளை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. 'பிரெக்ஸிட்' நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ம் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 'பிரெக்ஸிட்' விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 2வது முறையாக இது நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.