Home » உலகச் செய்திகள் » இந்தோனேசியா சுரங்க நிலச்சரிவு சம்பவம் - உயிரிழப்பு 27 ஆனது

இந்தோனேசியா சுரங்க நிலச்சரிவு சம்பவம் - உயிரிழப்பு 27 ஆனது

இதில் 3 பேர் பலியானதாகவும், 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

👤 Sivasankaran7 March 2019 5:09 PM GMT
இந்தோனேசியா சுரங்க நிலச்சரிவு சம்பவம் - உயிரிழப்பு 27 ஆனது
Share Post

இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது, இதில், கடந்த மாதம் 26ம் திகதி தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் பலரும் சிக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் பலியானதாகவும், 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து நடந்த மீட்புப் பணிகளில் மேலும், 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தற்போது வெளிவந்துள்ள செய்தியில், சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.