Home » உலகச் செய்திகள் » இலங்கையில் கைதிகளின் போராட்டம்

இலங்கையில் கைதிகளின் போராட்டம்

இலங்கையில் கைதிகள் பட்டினிப் போராட்டம்

👤 Mangatha21 Oct 2017 8:35 AM GMT
இலங்கையில் கைதிகளின் போராட்டம்
Share Post

அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கு தமது வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் பட்டினிப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை என்று, அர­சி­யல் கைதி­கள் நேற்­றி­ரவு தெரி­வித்­த­னர். 4 வரு­டங்­க­ளாக வவு­னியா மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்ற வழக்கை அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றுக்கு இட­மாற்­றி­யதை எதிர்த்து மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­கள் கடந்த மாதம் 25ஆம் திகதி பட்டினிப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­த­னர்.
இவர்­க­ளது உற­வி­னர்­கள், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் என்ற இரு­த­ரப்­புக்­க­ளும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவை நேற்­றுச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தன.
இந்­தப் பேச்­சுக்­க­ளின் உறு­தி­யான முடிவு வழங்­கப்­ப­டா­த­தைச் சுட்­டிக்­காட்­டிய தமிழ் அர­சி­யல் கைதி­கள், தமது வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் பட்டினிப் போராட்­டத்­தைக் கைவி­டப் போவ­தில்லை என்று தெரி­வித்­த­னர்.

இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­ பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.
அர­சியல் கைதி­களின் விவகாரம் மீண்டும் விசு­வ­ரூபம் எடுத்­துள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர்ச்­சி­யாக பட்டினிப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­பதே இதற்குக் காரணம்.
தமக்கு எதி­ரான வழக்­குகள் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் விசா­ரணை செய்­யப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை முதன்­மைப்­ப­டுத்­தியே அந்த மூன்று அர­சியல் கைதி­களும் இந்தப் போராட்­டத்தில் குதித்­தி­ருக்கின்றார்கள். வழ­மை­யாகக் கூறப்­ப­டு­வ­து­போல, சாகும் வரை­யி­லான பட்டினி என கூறாமல் தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறி­யி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது. அத்­துடன் அவர்கள் சிறைச்­சாலை அதி­கா­ரிகள், சிறைச்­சாலை வைத்­திய அதி­காரி மட்­டு­மல்­லாமல் தங்­களை நேர­டி­யாகச் சந்­தித்த வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளது வேண்­டு­கோள்­களைப் புறந்­தள்ளி தமது போராட்­டத்தை உறு­தி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.
உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் உடல் நிலை மோச­ம­டை­கின்­றது. இது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதைச் சுட்­டிக்­காட்டி, அவர்­க­ளு­டைய கோரிக்­கைகள் தொடர்பில் அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­கொண்டு உரிய நட­வ­டிக்­கைகள் எடுப்போம் என்று வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்கள் அவர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்த போதிலும், அவர்கள் தமது பட்டினியை கைவிட மறுத்­து­விட்­டார்கள்.
அது மட்­டு­மல்­லாமல் நீர்­கூட அருந்த மாட்டோம் எனக்­கூறி, தமது பட்டினிப் போராட்­டத்தை அவர்கள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். அனு­ரா­த­புரம் சிறைக் கூடு­களில் மரண தண்­டனை பெற்ற கைதி­க­ளோடு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த அர­சியல் கைதிகள் உடல் நிலை மோச­ம­டைந்­ததன் கார­ண­மாக சிறைச்­சாலை மருத்துவமனையில் அனு­ம­திக்­கப்­பட்டு, பின்னர் அங்­கி­ருந்து அவர்கள் அனு­ரா­த­புரம் அரச பொது மருத்துவமனைக்கு மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அங்­கேயும் அவர்கள் தமது போராட்­டத்தைக் கைவி­ட­வில்லை. உறு­தி­யாகத் தொடர்­கின்­றார்கள்.
அவர்­க­ளு­டைய போராட்­டத்­திற்கு வலுச் சேர்க்கும் வகையில் வட­மா­காணம் முழுவதும் கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. தேசிய தமிழ்த் ­தின விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு மேற்­கொள்ளத் திட்டமி­ட்­டி­ருந்த வருகையை ஒட்டி இந்த கடை­ய­டைப்புப் போராட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.
பட்டினிப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அத்­துடன் சிறைச்­சா­லை­களில் நீதி­ வி­சா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஏனைய கைதி­க­ளையும் விடு­தலை செய்ய வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக எடுக்க வேண்டும் என ஜனா­தி­ப­திக்கு அழுத்தம் கொடுப்­ப­தற்­கா­கவே, இந்தக் கடை­ய­டைப்புப் போராட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.
அது மட்­டு­மல்­லாமல், யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை செய்­கின்ற ஜனா­தி­பதி தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பான நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு உரிய உத்­த­ர­வாதம் அளிக்­கா­விட்டால், அவ­ரு­டைய யாழ் வருகைக்குப் பகி­ரங்­க­மாக எதிர்ப்பு தெரி­வித்து போராட்டம் நடத்­தப்­படும் என்றும் கடை­ய­டைப்­புக்­கான ஏற்­பாட்டில் பங்­கெ­டுத்­துள்ள ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கட்­சி­யி­னரால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பது நீண்­ட­கா­ல­மா­கவே தீர்க்­கப்­ப­டாத ஒரு பிரச்­சி­னை­யாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நீர்த்துப் போகாமல் எரி­ம­லையை ஒத்­த­தாக, கொதி நிலையில் அது கொதித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. அவ்­வப்­போது அதனை அணைப்­ப­தற்­காக அல்­லது நீர்த்துப் போகச் செய்­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் அளிக்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­று­தி­களும், போலி­யான நட­வ­டிக்­கை­களும் அதனை உயிர்த்­தி­ருப்­ப­தற்கே வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது.
தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக 60 வரு­டங்­க­ளாகப் போராட்­டங்கள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. முப்­பது வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­டங்கள் உரிய முறையில் அர­சாங்­கங்­க­ளினால் கவ­னத்தில் எடுத்து, தமிழ் மக்­க­ளு­டைய உரிமைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. மாறாக அரச அடக்­கு­மு­றை­களே கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இதன் விளை­வாக ஆயுதப் பேராட்டம் தலை தூக்­கி­யது. ஆயுதப் போராட்டம் கார­ண­மா­கவே முப்­பது வரு­டங்­க­ளாக இந்த நாட்டில் ஒரு யுத்தம் மூண்­டி­ருந்­தது.
தமிழ் இளை­ஞர்கள் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்­தி­ருந்த ஆயுதப் போராட்டம் பல்­வேறு மாற்­றங்­களின் பின்னர் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் மிகத் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. நியூயோர்க் மாந­கரின் உலக வர்த்­தக நிலையத் தொடர்­மாடிக் கட்­டி­டத்தில் அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு நிறு­வ­ன­மா­கிய பென்­டகன் மீது 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அல்­கைதா அமைப்­பி­னரால் நடத்­தப்­பட்ட விமானத் தற்­கொலைத் தாக்­கு­தலின் போது பேர­ழிவு ஏற்­பட்­டி­ருந்­தது. அதில் 3000 பேர் கொல்­லப்­பட்­டனர். ஆறா­யிரம் பேர் காய­ம­டைந்­தனர். அல்­கைதா அமைப்பைச் சேர்ந்த 19 பேர் கடத்­தப்­பட்ட விமா­னங்­களைப் பயன்­ப­டுத்தி பல முனை­க­ளி­லான இந்தப் பயங்­க­ர­வாதப் படு­கொலை தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர். உல­கமே விக்­கித்துப் போனது. இத­னை­ய­டுத்து, செப்டெம்பர் 11 பயங்­க­ர­வாதத் தாக்­குதல் என இது குறிக்­கப்­பட்­டது. அத்­துடன் உல­க­ளா­விய ரீதியில் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான அர­சியல் பாது­காப்பு நிலை­யி­லான ஒரு போக்கு தலை­யெ­டுத்­தி­ருந்­தது.
இந்த உலகப் போக்கை அல்­லது உலகம் கடைப்­பி­டித்த ஒழுங்கைப் பின்­பற்­றிய இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­களின் உரி­மைக்­காக ஆயுதம் ஏந்திப் போரா­டிய விடு­த­லைப்­புலி­களின் செயற்­பா­டு­களைப் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளாகச் சித்­த­ரித்து, அவர்­க­ளுக்குப் பயங்­க­ர­வா­திகள் என பெயர் சூட்­டி­யது. இதற்கு முன்­ன­தா­கவே தமிழ் இளை­ஞர்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டத்தை நசுக்­கு­வ­தற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் 1979 ஆம் ஆண்­டி­லேயே அர­சாங்­கத்­தி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.
அர­சியல் உரி­மைக்­காகப் போரா­டி­ய­வர்­களைப் பயங்­க­ர­வா­தி­களாகச் சித்­த­ரித்த அர­சாங்கம் அந்தப் போராட்­டத்தில் பங்­கெ­டுத்­தார்கள் என்ற சந்­தே­கத்­தின் ­பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களைப் பயங்­க­ர­வா­திகள் என்றே அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கின்­றது. அர­சியல் உரி­மைக்­கான போராட்­டத்­துடன் தொடர்­பு­டைய நட­வ­டிக்­கை­களில் சம்­பந்­தப்­பட்­டார்கள் என்ற கார­ணத்­திற்­காகக் கைது செய்­யப்­பட்­ட­வர்­களைத் தமிழ் மக்­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் கைதிகள் என குறிப்­பி­டு­கின்ற போதிலும், அதனை அர­சாங்­கமும் இரா­ணு­வமும் தொடர்ந்து மறு­த­லித்து வரு­கின்­றன.
அந்த வகை­யி­லேயே நீதி அமைச்­ச­ராகப் புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள தலதா அத்­துக்­கோ­ர­ளையும் அர­சியல் கைதிகள் என நாட்டில் எவரும் கிடை­யாது. விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருந்­தார்கள் என்ற கார­ணத்­திற்­காக சிறைச்­சா­லை­களில் பயங்­க­ர­வா­தி­களே தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.
தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைக்­கான சாத்­வீகப் போராட்­டங்கள் கணக்கில் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அரசாங்­கங்கள் அவற்றை எள்ளி நகை­யா­டின. போலி­யான பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி கிழித்­தெ­றி­வ­தற்­காக அல்­லது கிடப்பில் போடப்­ப­டு­வ­தற்­கா­கவே ஒப்­பந்­தங்­களைச் செய்­தன. அதனால் தீவிரம் பெற்ற போராட்­டங்­களை அள­வுக்கு அதி­க­மான பலத்தைப் பிர­யோ­கித்து வன்­மு­றையின் மூலம் போராட்­டங்­களை அடக்கி ஒடுக்­கின. இதனால் தனி­நாட்­டுக்­கான போராட்டம் வெடித்­தது, போராட்­டத்தைத் தீவி­ரப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், அரச பயங்­க­ர­வா­தத்தில் இருந்து போராட்­டத்தைப் பாது­காப்­ப­தற்­கா­கவும் ஆயுதப் போராட்டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.
நாட்டு மக்­களில் ஒரு பகு­தி­யி­ன­ரா­கிய தேசிய சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­க­ளு­டைய போராட்­டத்தைப் பயங்­க­ர­வா­த­மா­கவும் அந்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டார்கள் அல்­லது ஆத­ரித்­தார்கள் என்ற கார­ணத்­திற்­காக, அவர்­களைப் பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்து, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் சிறைச்­சா­லை­களில் தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் சீரான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதுவே அர­சியல் கைதிகள் விவ­காரம் எரியும் பிரச்­சி­னை­யாகக் கொதித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.
பயங்­க­ர­வா­திகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை என்ன செய்­வது, எவ்­வாறு தண்­டிப்­பது என்­பது தொடர்பில் அரச தரப்பில் திட­மான கொள்கை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. பயங்­க­ர­வாதம் தொடர்­பாக தேசிய அள­வி­லான கொள்கை அர­சாங்­கத்­திடம் இல்லை என்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகக் கருத வேண்­டி­யி­ருக்கின்றது.
முன்­னைய ஆட்சிக் காலத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து நாட்டில் நில­விய பயங்­க­ர­வா­தமும் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டு­விட்­டது என்று அர­சாங்­கமே உறு­தி­யாகக் கூறு­கின்­றது. பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்டு நாட்டில் அமைதி நில­வு­கின்­றது. மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றார்கள் என்­பது அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு. ஆனால் எட்டு வரு­டங்கள் கழிந்த பின்னும், பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்பு கொண்­டி­ருந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட அர­சியல் கைதி­களின் விடயம் விவ­கா­ர­மாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.
அவர்­களை அர­சியல் கைதிகள் என ஏற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் மறுத்து வரு­கின்­றது. அப்­ப­டி­யானால், அர­சாங்கம் கூறு­வதைப் போன்று பயங்­க­ர­வா­திகள் என சந்­தேக­த்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை அர­சாங்கம் என்ன செய்யப் போகின்­றது என்ற கேள்­விக்கு அர­சாங்­கத்­திடம் சரி­யான பதில் கிடை­யாது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு அந்த சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்ற வழக்­கு­களில் சந்­தேக நபர்­க­ளு­டைய வாக்­கு­மூ­லங்­களே, ஒப்­புதல் வாக்­கு­மூலம் என்ற பெயரில், அவர்கள் குற்றம் செய்­தார்கள் என்­ப­தற்­கான முழு­மை­யான ஆதா­ர­மாக நீதி­மன்­றங்­களில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அதன் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்குத் தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
ஒப்­புதல் வாக்­கு­மூலம் ஒன்றே பயங்­க­ர­வாதச் செயற்­பாட்டில் ஒருவர் ஈடு­பட்டார் என்­ப­தற்­கு­ரிய போது­மான ஆதா­ர­மாகக் கரு­தப்­ப­டு­கின்ற நிலையில், நூற்­றுக்கும் மேற்­பட்ட கைதி­களை, உள்­நோக்கம் கார­ண­மா­கவே அர­சாங்கம் பல வரு­டங்­க­ளாக இன்னும் சிறைச்­சா­லை­களில் அடைத்து வைத்­தி­ருக்கின்றது என்று கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது.
இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.
பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­பட்­ட­மைக்­காகக் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அல்­லது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்கள் மற்றும் பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் ஆகிய இரு பிரி­வி­ன­ரையும் அர­சாங்­கமும் அரச நீதித்­து­றையும், இரா­ணுவ புல­னாய்வு பிரி­வி­னரை உள்­ள­டக்­கிய இரா­ணு­வமும் கையாண்டு வரு­கின்ற முறைமை வேடிக்­கை­யா­ன­தாக இருக்கின்றது.
யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பாது­காப்பு அளிக்­கப்­படும், பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என்ற அர­சாங்­கத்தின் ஒலி­பெ­ருக்கி அறி­வித்­தல்கள் மூல­மான பகி­ரங்க உத்­த­ர­வா­தத்தை ஏற்று சர­ண­டைந்­த­வர்­களும், காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்டும், புல­னாய்­வா­ளர்­க­ளினால் கண்டுபிடிக்­கப்­பட்டும் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 11 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் இரா­ணு­வத்தின் புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.
இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மற்றும் ஒரு தொகு­தி­யினர் என்ன ஆனார்கள், அவர்­களை இரா­ணுவம் என்ன செய்­தது என்­பது இன்னும் மர்­ம­மாக இருக்­கின்­றது. இரா­ணு­வத்­தி­னரால் இவர்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்பட்டார்கள் என்ற போர்க்­குற்­றச்­சாட்டு படை­யினர் மீதும் அர­சாங்­கத்தின் மீதும் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது பிறி­தொரு விவ­கா­ர­மான விட­ய­மாகும்.
ஆனால், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு உத­வி­னார்கள் அல்­லது மறை­மு­க­மாகச் செயற்­பட்­டார்கள் என்ற கார­ணத்­திற்­காகக் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ரணை செய்­யவோ துரித சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தவோ விருப்­ப­மில்­லாத ஒரு போக்­கையே அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கின்­றது.
இது பயங்­க­ர­வாதம் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்ற இரட்டை நிலைப்­பாட்­டையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது. அத்­துடன் பயங்­க­ர­வாதம் என்ற விட­யத்தை சிறு­பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்­களை திட்­ட­மிட்ட வகையில் பழி­வாங்­கு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­து­கின்ற ஓர் அர­சியல் மூர்க்­கத்­த­னத்­தையும் அடை­யாளம் காண முடி­கின்­றது.
பயங்­க­ர­வாதம் குறித்து தெளி­வான தேசிய கொள்கை ஒன்று இருக்­கு­மே­யானால், அர­சியல் கைதிகள் – அர­சாங்­கத்­தினால் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற பயங்­க­ர­வாதச் சந்­தேக நபர்கள் அல்­லது பயங்­க­ர­வா­திகள் – சிறைச்­சா­லை­களில் இருக்­க­மாட்­டார்கள்.

Tags