Home » உலகச் செய்திகள் » ரோஹிங்ய விவகாரம்

ரோஹிங்ய விவகாரம்

ரோஹிங்ய முஸ்லிம்களை திரும்பப் பெற மியான்மார் சம்மதம்

👤 Mangaathaa26 Oct 2017 11:39 AM GMT
ரோஹிங்ய விவகாரம்
Share Post

வன்முறைக்கு அஞ்சி மியான்மாவிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சம் புகுந் துள்ள லட்சக்கணக்கான அகதி களைத் திரும்பப் பெறுவதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:
ரோஹிங்யா அகதிகள் பிரச்சினை குறித்து மியான்மா தலைநகர் நேபிடாவில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அகதிகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக வங்கதேசம் மற்றும் மியான்மா நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரோஹிங்யாக்கள் அதிகம் வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் அமைதியைத் திரும்பச் செய்ய வும், அந்தப் பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகள் வங்கதேசத்துக்கு வராமலிருப் பதை உறுதி செய்யவும் மியான்மார் ஒப்புக் கொண்டது என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மியான்மார் உள்துறை அமைச்சக அதிகாரி டின் மியின்ட், மியான்மார் திரும்பும் அகதிகள் ஒவ்வொருவரும் பரி சோதிக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் ராக்கைன் மாகாணத் தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை காட்டினால் மட்டுமே நாட்டுக் குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.