Home » உலகச் செய்திகள் » தலிபான் தாக்குதல்

தலிபான் தாக்குதல்

தலிபான் தாக்குதலில் ஆப்கான் ராணுவத் தளம் அழிப்பு

👤 Mangaathaa26 Oct 2017 11:44 AM GMT
தலிபான் தாக்குதல்
Share Post

ஆப்கானிஸ் தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற தாலி பன் பயங்கரவாதி களின் கொட்டத்தை அடக்க முடி யாமல் உள்நாட்டுப் படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.
இந்த நிலையில் அங்கு காந்த ஹார் மாகாணத்தில், மைவாந்த் மாவட்டத்தில் சாஷ்மோ பகுதி யில் அமைந்துள்ள ராணுவ முகா மில் நேற்று அதிகாலையில் தாலிபன் இயக்கத்தின் தற்கொலைப் படையினர், 2 கார்களில் வெடி குண்டுகளை ஏற்றிச் சென்று வெடிக்க வைத்து கொடூர தாக்கு தல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலால் அந்த ராணுவ தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாது காப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டையும் நடந்தது.
இதன் முடிவில் 43 ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட் டனர். 10 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றனர். சம்பவம் நடந்த இடம் போர்க் களம்போல காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு பக்தியா மாகாணத்தில் கார்டெஸ் நகரில் காவல்துறை வளாகம் ஒன்று குறிவைத்து தாக்கப் பட்டது. குண்டுகளை வெடித் தும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்தப் பட்ட இந்த தாக்குதல் களில் 80 பேர் பலியாகி உள்ளதாக அங்கி ருந்து வரும் தகவல்கள் கூறு கின்றன.
தாலிபன்களின் தொடர் அட் டூழியச் செயல்கள், அந்த நாட்டு அரசுக்கு பெருத்த தலைவலியாக அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.