Home » முதன்மைச் செய்திகள் » தண்ணீர் பஞ்சத்தால் கலவரம் ஏற்படும் அபாயம் கேப் டவுனில் பாதுகாப்பு அதிகரிப்பு
தண்ணீர் பஞ்சத்தால் கலவரம் ஏற்படும் அபாயம் கேப் டவுனில் பாதுகாப்பு அதிகரிப்பு
தென்னாப்பிரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றான கேப் டவுனில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால், மக்களிடையே கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
👤 Saravana Rajendran5 Feb 2018 5:44 PM GMT

தென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுனில் சுமார் 4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை அளவு மிகவும் குறைந்ததால், கேப் டவுனில், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதுதாகத்தில் தவிக்கும் மக்கள்!
தற்போதைக்கு, அவசர அவசரமாக 200 அவசர குடிநீர் வழங்கல் மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 20,000 வீடுகளுக்குக் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ஒருவரது தினசரி தேவைக்காக, 87 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. கார் சுத்தப்படுத்துதல், நீச்சல் குளம் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கை நீரூற்றுகளிலிருந்து தண்ணீர் திருடுபவர்களைக் கண்காணிப்பதற்கு சிறப்புக் காவல் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதத்துக்கு பிறகு அங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. தண்ணீர் முற்றிலுமாக இல்லாத 'டே ஜீரோ' என்று அழைக்கப்படும் அந்த பூஜ்ஜிய நாள் அநேகமாக ஏப். 16-ல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே அங்கு வசிக்கும் மக்களுக்குள், தண்ணீர் சண்டைகள் வரத் தொடங்கிவிட்டன. இன்னும் சில நாட்களில் தண்ணீருக்காக இங்கு கலவரமே வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது.
இந்தியாவிலும் தண்ணீர் பஞ்சம்
ஏற்கெனவே ஈரான், சோமாலியா, மெக்ஸிகோஆகிய நாடுகள் கடும் குடிநீர்ப் பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. தற்போது இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் குடிநீருக்கான பற்றாக்குறை நிலவிவருகிறது. இந்தியாவின் 21 நகரங்களிலும் இத்தகைய குடிநீர்ப் பஞ்சம் உருவாவதற்கான வாய்ப்புள்ளது. கேப் டவுன் நகரத்தைப் போலவே சென்னையிலும், நகரத்தின் கிடுகிடு வளர்ச்சி, நகரத்திற்குக் குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை மிதமிஞ்சி அதிகரித்தது ஆகியவையால் விரைவில் சென்னை நகருக்கும் இதுபோன்ற ஒரு நிலை ஏற்படலாம் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire