Home » உலகச் செய்திகள் » மாலத்தீவில் கைவரிசை காட்டிய இந்தியா

மாலத்தீவில் கைவரிசை காட்டிய இந்தியா

அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு என்பது மாலத்தீவுக்கு புதியது அல்ல. 1988-ம் ஆண்டு இந்தியாவின் உளவு அமைப்பான ரா தூண்டுதலால் அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டது.

👤 Saravana Rajendran6 Feb 2018 12:40 AM GMT
மாலத்தீவில் கைவரிசை காட்டிய இந்தியா
Share Post

மாலத்தீல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிபர் யாமின் ஏற்க மறுத்து வருவதால் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசியல் தலைவர்களை விடுதலை செய்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்பதால் அதை ஏற்க மறுத்து வருகிறார் யாமின். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.
1988-ஆம் ஆண்டு இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் இலங்கையில் முகாமிட்டது, அப்போதைய காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் தனது அதிகாரத்தை வலுப்படுத்த மாலத்தீவிலும் தனது கைவரிசையைக் காட்டியது இந்திய அரசு என சில அரசியல் நிபுனர்கள் கூறுகின்றனர்.
இப்போதைய நிலை போன்றே அன்றும் அரசியல் குழப்பம் ஏற்பட மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சியை முறியடிக்க இந்தியாவின் உதவியை நாடும் நிலைக்கு அன்றைய மாலத்தீவு அதிபர் தள்ளப்பட்டார். இதனை அடுத்து இந்திய ராணுவம் 2000 படைவீரர்களை மாலத்தீவில் தரையிறங்கியது, மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்தியா தரப்பில் தழீழப்பகுதியில் உள்ள அமைப்பு(பிளாட்) ஒன்று மாலத்தீவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது என்று கூறி அங்கு பணியில் இருந்த தமிழர்களை நாடுகடத்தியது. இறுப்பினும் இந்திய அரசால் இந்துமக்கடல் பகுதியில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள இயலாமல் போய்விட்டது.
ஆனவே இந்துமாக்கடல் பகுதி நாடுகளில் அரசியல் குழப்பம் நிலவினால் அதற்கு இந்தியாவும் ஒரு காரணாக இருக்கும் என்ற ஒரு கருத்து பன்னாட்டு அரசியல் வல்லுனர்கள் மத்தியில் நிலவுகிறது, தற்போது மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கம் நிலவுகிறது, இந்த நிலையில் அங்கு எற்பட்டுள்ள இந்த சூழல் இந்திய சீனா அதிகாரப்போட்டியின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது

Tags