Home » உலகச் செய்திகள் » கொலைமிரட்டல் விவகாரம் சிங்கள ராணுவ அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த வலியுறுத்தல்

கொலைமிரட்டல் விவகாரம் சிங்கள ராணுவ அதிகாரியை இலங்கைக்கு நாடு கடத்த வலியுறுத்தல்

இலங்கைத் தூதரகத்தில் திமிர்த்தனமாக நின்றுகொண்டு அங்குள்ள ஈழத்தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என்று கூறிய ராணுவ அதிகாரியை நாடுகடத்தக் கோரி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

👤 Saravana Rajendran7 Feb 2018 6:09 AM GMT
Share Post

இலங்கை தூதரகத்தில் 70-வது சுதந்திரமடைந்த நாள் லண்டன் நகரில் கொண்டாடப்பட்டது. இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற போக்கைக் கண்டித்து இலங்கை சுதந்திர நாள் கொண்டாட்டத்தை துக்கநாளாக கடைபிடித்து ஈழத் தமிழர்கள் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு நின்ற இலங்கை ராணுவ அதிகாரியும் அய்க்கிய நாடுகள் அவையினால் போர்க்குற்றச்சாட்டு மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருமான பிரிய பெர்னாண்டோ, போராடும் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுத்து போட்டுவிடுவேன் என சைகையால் மிரட்டினார். பல முறை இதேபோல் மிரட்டும் வீடியோ காட்சி வைரலாக பரவுகிறது.
இதனை கண்டித்துள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அவரை உடனே நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இலங்கை ராணுவ அதிகாரியின் இந்த வெறித்தனம் இங்கிலாந்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Tags