Home » உலகச் செய்திகள் » உலகின் பரபரப்பான விமான நிலையம்: துபை முதலிடம்

உலகின் பரபரப்பான விமான நிலையம்: துபை முதலிடம்

கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலை யங்கள் பட்டியலில் துபை விமான நிலையம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து அய்க்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘வாம்‘ தெரிவித்துள்ளதாவது:

👤 Saravana Rajendran7 Feb 2018 3:26 PM GMT
Share Post

2017-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பரபரப்பாக காணப் பட்ட விமான நிலையங்களின் பட்டியலில் துபை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக துபை இந்தப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த விமான நிலையம் 8.82 கோடி பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
அமெரிக்கா செல்லும் விமானங்களில் தற்காலிகமாக மடிக்கணினி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண் டில் சர்வதேச பயணிகளின் எண் ணிக்கை 46 லட்சம் அதிகரித்துள் ளது என அந்த செய்தி நிறுவ னம் தெரிவித்துள்ளது.