Home » உலகச் செய்திகள் » சுற்றுலாவிசாவில் வந்த ஊடகவியாளர்கள் விடுவிப்பு மாலத்தீவில் தொடரும் பதட்டநிலை

சுற்றுலாவிசாவில் வந்த ஊடகவியாளர்கள் விடுவிப்பு மாலத்தீவில் தொடரும் பதட்டநிலை

மாலத்தீவு அரசியலில் பெரும் குழப்பம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு சுற்றுலா விசாவில் வந்த ஊடகவியளாலர் இருவர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்களை விடுவித்து உடனடியாக நாட்டைவிட்டு வெளியெற்றப்பட்டனர்.

👤 Saravana Rajendran10 Feb 2018 5:02 PM GMT
சுற்றுலாவிசாவில் வந்த ஊடகவியாளர்கள் விடுவிப்பு மாலத்தீவில் தொடரும் பதட்டநிலை
Share Post

மாலத்தீவில் தற்போது அதிபர் யாமீன் அவசரநிலையை அமல்படுத்தியுள்ளார். ஊச்சநீதிமன்ற நீதிபதிகள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என கைது வேட்டை நடக்கிறது. அங்கு அனைத்து செய்தி நிறுவனங்கள் அச்சு ஊடகங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், அங்கு என்ன நடக்கிறது என வெளியே உள்ளவர்கள் அறிய முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில், ஏ.எப்.பி.,யின் இரண்டு ஊடகவியளார்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மோணி சர்மா என்பவர் இந்தியர், ஆதிஷ் ராவ்ஜி படேல் இங்கிலாந்தை சேர்ந்த இருவரும் கைதானார்கள். அவர்கள் சுற்றுலாவிசாவில் மாலத்தீவிற்கு வந்து ஊடகவியலாளர் பணிபுரிந்ததாக மாலத்தீவு ராணுவ பேச்சாளர் மின்னஞ்சல் மூலம் கூறியிருந்தார்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட இருவரையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மாலத்தீவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.