Home » கேளிக்கை » வெண்ணிற ஆடை போர்த்திய ஈபில் டவர்,

வெண்ணிற ஆடை போர்த்திய ஈபில் டவர்,

பாரீசில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran10 Feb 2018 5:07 PM GMT
வெண்ணிற ஆடை போர்த்திய ஈபில் டவர்,
Share Post

உலக அதிசயங்களில் ஒன்றான காரணமாக ஈபிள் கோபுரம் பாரீஸ் நாட்டின் அடையாளமாக திகழுகிறது. இதைப்பார்க்கவே உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாபயணிகள் பாரீஸ் நாட்டிற்கு படையெடுக்கின்றனர். இந்த நிலையில், பாரீசில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.

கடந்த 1887-ம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு 12 செ.மீட்டர் உயரத்துக்கு பனி கொட்டிக்கிடக்கிறது. இதனால் ஈபிள் கோபுரத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வரை இது மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.