Home » உலகச் செய்திகள் » பெண்கள் ஹிஜப் அணிய அவசியமில்லை. அடுத்த புரட்சிகர நடவடிக்கைக்கு தயாராகிறது சவுதி

பெண்கள் ஹிஜப் அணிய அவசியமில்லை. அடுத்த புரட்சிகர நடவடிக்கைக்கு தயாராகிறது சவுதி

பெண்கள் பர்தா அணிய வேண்டிய கட்டாயமில்லை என சவுதி அரேப்பியாவின் தலைமை இஸ்லாமிய மதகுரு கருத்து தெரிவித்துள்ளார். இது விரைவில் சட்டவடிவமாக அரங்கேறப்போகிறது.

👤 Saravana Rajendran11 Feb 2018 10:55 AM GMT
பெண்கள் ஹிஜப் அணிய அவசியமில்லை. அடுத்த புரட்சிகர நடவடிக்கைக்கு தயாராகிறது சவுதி
Share Post

சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். இதுவரை பெண்கள் கார் ஓட்ட தடை இருந்த சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெரும் வகையில் 2018-ஆம் ஆண்டு சட்ட அனுமதியளித்தது. அதன்பின் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அந்நாட்டின் முதன்மை இஸ்லாமிய மதபோதகர் சேக் அப்துல்லா அல் முத்லாக் பெண்கள் ஹிஜப் (பர்தா அல்லது புர்கா) எனப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடையை அணிவது அவசியமில்லை என்றுள்ளார்.

சேக் அப்துல்லா அல் முத்லாக் கருத்துப்படி ''சவுதியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜப் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை. எளிமையான உடை அணிந்தால் போதும். கலாச்சாரத்தை சீர்குலைக்காத உடையே போதும்'' என்றார். மேலும் ''உலகில் இஸ்லாத்தை பின்பற்றும் பல நாடுகள் இருக்கிறது. பல கோடி இஸ்லாமிய பெண்கள் இருக்கிறார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் இப்படி இறுக்கமாக பர்தா அணிவதில்லை. அப்படி இருக்கும் போது நாம் மட்டும் இப்படி எல்லாம் கட்டுப்பாடு விதிக்க முடியாது'' என்றுள்ளார்.
பெண்கள் பர்தா அணியாமல் இருப்பது அங்கு பெரிய தவறு. சவுதி சட்டத்தில் இதற்கு பெரிய தண்டனை இருக்கிறது. இந்த நிலையில் அங்கு இருக்கும் பெரிய மதபோதகர் ஒருவர் இப்படி கூறியது பலருக்கும் இன்ப அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த கருத்து விரைவில் சட்டமாக மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது. ஒரு புறம் பழமை வாத இஸ்லாமியர்கள் தீவிரமாக இஸ்லாத்தின் கொள்கைகளை கடைபிடிக்க வலியுறுத்திவரும் நிலையில் இஸ்லாமின் தலைமை இடமாக திகழும் சவுதி அரேபியாவில் ஏற்பட்ட இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.