Home » உலகச் செய்திகள் » பாதுகாவலர்களின் மீது நம்பிக்கை இல்லாமல் எக்ஸ்ரே ஸ்கேனருக்குள் சென்ற பெண்

பாதுகாவலர்களின் மீது நம்பிக்கை இல்லாமல் எக்ஸ்ரே ஸ்கேனருக்குள் சென்ற பெண்

சினாவின் டாங்-வான் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பாதுகாப்பு எக்ஸ்ரே ஸ்கேனர் கருவிக்குள் சென்று வந்த பெண் குறித்த படம் வெளியாகியுள்ளது.

👤 Saravana Rajendran14 Feb 2018 3:52 PM GMT
பாதுகாவலர்களின் மீது நம்பிக்கை இல்லாமல் எக்ஸ்ரே ஸ்கேனருக்குள் சென்ற பெண்
Share Post

உலகில் நாள் தோறும் பல்வேறு சுவையான, கவலையான, மகிழ்வான, அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடந்துகொண்டே உள்ளது. ஆனால் சீனாவில் நடந்த ஒரு நிகழ்வு இன்று உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
உலகில் உள்ள பல நாடுகளில் பெரிய ரயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களில், பயணிகளின் பைகளை ஸ்கேன் செய்யும் கருவிகள் உள்ளன. இதே போல் சீனாவிலும் இந்தக்கருவிகள் அனைத்து ரயில் நிலையத்திலும் உள்ளது.
சீனாவின் டாங்-வான் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி பயணிக்க இருந்தார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது உடமைகளை எக்ஸ்ரே ஸ்கேனர் கருவிக்குள் வைக்க கூறினார்கள் இந்த பெண்மணி ரயில் நிலையம் சென்றபோது, அவரின் கைப்பையை ஸ்கேன் செய்ய அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கேட்டனர். ஆனால் கைப்பையை நான் தனியே வைக்கமாட்டேன் எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி எக்ஸ்ரே ஸ்கேனர் இயந்திரத்தின் உள்ளே செல்லும் கன்வயர் பெல்ட்டில் அமர்ந்துகொண்டார்.
பாதுகாவலர்கள் அவரை வெளியே இழுக்கும் முன்பே அந்த கருவியுள்ளே அவர் சென்றுவிட்டார். அக்கருவி பேக்குடன் சேர்த்து, இந்த பெண்மணி உடலையும் ஸ்கேன் செய்துவிட்டது
மிகவும் சக்தி வாய்ந்த இதுபோன்ற எக்ஸ்ரே கருவிக்குள் செல்வது உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறி, பாதுகாவலர்கள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.