Home » உலகச் செய்திகள் » இந்தியதொழிலதிபர் செய்த மோசடியால் பதவியிழந்த ஜேக்கப் ஜூமா

இந்தியதொழிலதிபர் செய்த மோசடியால் பதவியிழந்த ஜேக்கப் ஜூமா

இனவெறியை எதிர்த்துப் போராடி நெல்சன் மண்டேலாவுடன் ராபன் சிறையில் பல ஆண்டுகளாக அடைபட்டுக்கிடந்த இனவெறிக்கெதிரான போராளி ஊழல் கறையுடன் பதவியை விட்டுவிலகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran15 Feb 2018 7:19 AM GMT
இந்தியதொழிலதிபர் செய்த மோசடியால் பதவியிழந்த ஜேக்கப் ஜூமா
Share Post

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மக்களின் தலைவராக எளிமையான ஒரு தலைவராக இருந்தார்.
இளம் வயதிலேயே ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜூமா நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து இனவெறிக்கு எதிராக எதிர்த்து கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார். வெள்ளை நிறவெறி அரசால் நெல்சன் மண்டேலாவுடன் ராபென் தீவு சிறையில் பல ஆண்டுகள் இருட்டு அறையில் அடைக்கப்பட்டார்.
ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகப் பிரிவு தலைவராக இருந்துள்ளார். தனது நெருங்கிய நண்பர் தாபோ உம்பெக்கி அதிபராக இருந்தபோது துணை அதிபராக ஜூமா பணியாற்றினார்.
இருவருக்குள்ளும் பிரச்சனை உருவான நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் உம்பெக்கி அவரை பதவி நீக்கம் செய்தார். வெற்றிகளை மட்டுமே சுவைத்த ஜூமா ஜூமா, உம்பெக்கி இடையிலான அதிகாரப்போட்டியில் வென்ற ஜூமா ஆப்ரிக்க அதிபரானதோடு, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் தேர்வானார். தனது அரசியல் பயணத்தில் வளர்ச்சிகளையே சந்தித்து வந்த ஜூமா மீது போடப்பட்ட பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளும் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
தென் ஆப்பிரிகாவில் தனது 9 ஆண்டுகால ஆட்சியில் சிறந்த அரசியல்வாதியாக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த, தொழிலதிபர் குப்தா என்பவரை அரசின் முடிவுகளில் அவர் அதிகம் தலையிட அனுமதித்தார். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார்
ஜேக்கபின் இந்த நடவடிக்கையால் அவர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தன. கடைசியாக நாடாளுமன்றத்தில் ஜூமாவை பதவி விலக வைக்க நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்புகளும் அவருக்கு ஆதரவாகவே இருந்து. எதிர்க்கட்சிகளை முறியடித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்டார்.
எனினும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் ஜேக்கப் பதவி விலக வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எச்சரித்தன. இதன் விளைவாக உடனடியாக தான் பதவி விலகுவதாக ஜேக்கப் ஜூமா அறிவித்துள்ளார்.