Home » உலகச் செய்திகள் » நடுவானில் கழன்று விழுந்த எஞ்சீன் மீண்டும் ஒரு விமான விபத்து??

நடுவானில் கழன்று விழுந்த எஞ்சீன் மீண்டும் ஒரு விமான விபத்து??

சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பசிப்பிக் கடலில் மேல் பறந்துகொண்டு இருக்கும் போது விமானத்தில் வலது புற எஞ்சீன் கழன்று கடலில் விழுந்துள்ளது, இருப்பினும் விமானிகளின் சாமர்த்தியத்தால் ஒற்றை எஞ்சீனுடம் விமானம் பத்திரமாக ஹவாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

👤 Saravana Rajendran15 Feb 2018 3:23 PM GMT
நடுவானில் கழன்று விழுந்த எஞ்சீன் மீண்டும் ஒரு விமான விபத்து??
Share Post

சான்பிரான்சிஸ்கோ நகர விமான நிலையத்தில் இருந்து யுனிடைட் ஏர்லைன்ஸ் விமானம் ஹவாய் நோக்கி புறப்பட்டது, விமானம் புறப்படும் போது எந்த சிக்கலும் இல்லை, நிலப்பகுதியைக் கடந்து பசிபிக் கடல் மேல் பறந்துகொண்டு இருக்கும் போது விமானத்தில் தேவையற்ற ஓசைகளும் பயங்கரமாக குலுக்கமும் இருந்துள்ளது. அப்போது ஜன்னல் வழியாக வெளியே பார்த்த பயணிகளும் விமான சிப்பந்திகளும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
விமானத்தின் வலதுபுற எஞ்சீன் பாதி தொங்கிக்கொண்டு இருந்தது, சிறிது நேரத்தில் அந்த எஞ்சீன் கடலில் விழுந்தது, விமானத்தில் 363 பயணிகளும் 8 சிப்பந்திகளும் இருந்தனர். நிலமையை புரிந்துகொண்ட விமானிகள் பயணிகளுக்கு அவசரக் காலத்தில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் மீதம் இருக்கும் என்ஜின்களை வைத்துக் கண்டிப்பாக தரையிறக்க முடியும் என்றும் விமானிகள் கூறியுள்ளனர்.
சுமார் 2 மணிநேரப் போராட்டத்திற்கு பின் விமானம் ஹவாயில் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 363 பயணிகள், 8 விமான பணியாளர்கள், 2 விமான ஓட்டிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறினர்.
இச்சம்பவம் குறித்து அமெரிக்க விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோவில் ஒரு விமானம் வெடித்துச் சிதறியதில் 71 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு பெரிய விமான விபத்தில் இருந்து 380 உயிர்கள் பிழைத்துள்ளது