Home » உலகச் செய்திகள் » மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம். சுனாமி ஆபாயம் இல்லை

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம். சுனாமி ஆபாயம் இல்லை

மொக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இருந்தது.

👤 Saravana Rajendran17 Feb 2018 3:10 PM GMT
மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம். சுனாமி ஆபாயம் இல்லை
Share Post

மொக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக லத்தீன் அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் கூறியதாவது, " மொசிகோவில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கமானது முதலில் 7.5 ஆக ரிக்டர் அளவுகோலில் இருந்தது, பிறகு குறிந்து 7.2 ஆக கணக்கிடப்பட்டது, இருப்பினும் இது கடுமையான நிலநடுக்கம் ஆகும். பசிபிக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கம் ஆக்ஸாகா மாநிலத்திலிருந்து வடகிழக்கே பினோடேபா என்ற இடத்தில் மய்யம் கொண்டிருந்தது.
5 மாதங்களுக்கு முன்னதாக மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 370 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இச்செய்தி வெளியாகும் வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் விடிய விடிய சாலைகளில் தஞ்சமடைந்தனர்.