Home » உலகச் செய்திகள் » துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகளைக் காப்பாற்றிய தமிழக ஆசிரியை

துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகளைக் காப்பாற்றிய தமிழக ஆசிரியை

புளோரிடாவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்வின் போது தனது வகுப்பில் இருந்த மாணவர்களை தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை சாந்தி விஸ்வநாதன் துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார்.

👤 Saravana Rajendran17 Feb 2018 4:10 PM GMT
துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகளைக் காப்பாற்றிய தமிழக ஆசிரியை
Share Post

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் காதலர் தினத்தன்று இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.இக்கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர். என்ன காரணத்திற்காக இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று இதுவரை தெரியவில்லை.இதனிடையே இந்த துப்பாக்கிச் சூட்டின் போது பள்ளியின் இரண்டாம் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் அங்கு பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த கணித ஆசிரியரால் காப்பாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சாந்தி விஸ்வநாதன் என்ற அந்த ஆசிரியை அப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல தனது வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார் சாந்தி. திடீரென பள்ளியில் அலாரம் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விபரீதம் ஏதோ நடப்பதை உணர்ந்துள்ளார் சாந்தி.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கதவைத் தட்டியுள்ளனர். எனினும் கொலைகாரன் தான் கதவை தட்டுவதாக எண்ணி கதவை திறக்க மறுத்துள்ளார் சாந்தி. கதவை உடைத்துக்கொண்டு வா அல்லது சாவி கொண்டு திறந்து கொள் ஆனால் நான் கதவைத் திறக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார் சாந்தி. இதன் பின்னர் காவல்துறையினர் ஜன்னலை உடைத்து உண்மையை சொன்ன பின்னர் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த ஆசிரியரால் தங்களது குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்