Home » உலகச் செய்திகள் » காதல் சின்னத்தை பார்த்து ரசித்த ஜஸ்டின் ரூடோ

காதல் சின்னத்தை பார்த்து ரசித்த ஜஸ்டின் ரூடோ

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டீன் ரூடோ குடும்பத்துடன் தாஜ்மகாலை சுற்றுப்பார்த்து ரசித்துள்ளார்.

👤 Saravana Rajendran18 Feb 2018 8:05 AM GMT
காதல் சின்னத்தை பார்த்து ரசித்த ஜஸ்டின் ரூடோ
Share Post

டில்லியில் தான் தங்கியுள்ள விடுதியில் இருந்து காலை புறப்பட்டு விமானம் மூலம் ஆக்ரா சென்றடைந்தார். அங்கிருந்து தரை வழியாக ஆக்ரா சென்று சேர்ந்தார். ஆக்ரா நகர நிர்வாகத்தின் சார்பின் கனடிய பிரதமருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இதனை அடுத்து தாஜ்மகாலை குடும்பத்துடன் பார்வையிட்ட ஜஸ்டின், கட்டிட அமைப்புகள், தாஜ்மகால் வரலாறு ஆகியவற்றை விசாரித்து கேட்டுக்கொண்டார்.
தாஜ்மகாலை சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்து மும்பை, அமிர்தரஸ் ஆகிய இடங்களுக்கும் சுற்றுபயணம் செல்லும் கனடா பிரதமர், வரும் 23ம் தேதி மோடியை சந்தித்துப் பேசுகிறார்.