Home » உலகச் செய்திகள் » பிரென்சு பிரை சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சினை தீருமா?

பிரென்சு பிரை சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சினை தீருமா?

மாறுபட்ட வாழ்க்கைச்சூழலில் இளைஞர்களுக்கும் நரைமுடி மற்றும் முடி உதிருதல் போன்றவை மிகபெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு மாற்றாக பல மருந்துகள், இயற்கை மூலைகை எண்ணெய்கள் என்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது,

👤 Saravana Rajendran19 Feb 2018 9:08 AM GMT
பிரென்சு பிரை சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சினை தீருமா?
Share Post

ஜப்பானில் உள்ள யோக்கோகாமா பல்கலைக்கழகத்தில் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆய்வக எலிகளுக்கு டை-மெத்தில்-பாலிசில்-ஆக்சேன்(dimethylpolysiloxane) என்ற வேதிப்பொருளை பூசிய போது அதன் ரோமங்கள் உதிர்ந்த பாகங்களில் மீண்டும் ரோமங்கள் முளைப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பை ஜப்பானின் மருத்துவ ஜெர்னலிலும் வெளிவந்தது,
இந்த வேதிப்பொருள் உருளைக்கிழங்கை பிரெஞ்சு பிரை, சிப்ஸ் மற்றும் இதர வறுத்து உண்ணும் பொருளாக மாற்றும் போது சேர்க்கப்படுகிறது.
இந்த மருத்துவ ஜெர்னல் வெளிவந்த பிறகு ஜப்பானில் முடி உதிரும் பிரச்சினை உள்ளவர்களும், நரைமுடிக்காரர்களும் அதிக அளவு உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட பிரென்சு பிரை, சிப்ஸ், டீப் பிரை ஸ்பைசி பொட்டட்டொஸ் போன்றவற்றை சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். சில நாட்களிலேயே இவ்வகை உணவு விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து எலியை ஆய்வுக்கு உட்படுத்திய அறிவியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான டை-மெத்தில்-பாலிசில்-ஆக்சேன் என்பது அடர்த்தி மிகுந்ததும் காரத்தன்மை உடையதுமாகும், உணவிற்கு பயன்படுத்தப்படும் டை-மெத்தில்-பாலிசில்-ஆக்சேன் உருளைக்கிழங்கில் காரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக மிகவும் குறைந்த அளவு அடர்த்தி குறைந்த வேதிப்பொருள் பயன்படுத்தப் படுகிறது,
முடி வளர்வதற்காக டை-மெத்தில்-பாலிசில்-ஆக்சேனை நேரடியாக பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும், அதே நேரத்தில் உருளைக்கிழங்கு பொறித்த உணவு வகைகளை அதிக அளவு உண்பதால் முடி உதிர்வது, நரை முடி இன்மை போன்ற பிரச்சினைகள் தீராது ஆகவே யாரும் இது போன்ற செய்திகள் மற்றும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.