Home » உலகச் செய்திகள் » மூன்றாவது இன்னிக்ஸ் முடித்தார் இம்ரான்கான்

மூன்றாவது இன்னிக்ஸ் முடித்தார் இம்ரான்கான்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெரிக்-எ-பாகிஸ்தான் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.

👤 Saravana Rajendran19 Feb 2018 2:50 PM GMT
மூன்றாவது இன்னிக்ஸ் முடித்தார் இம்ரான்கான்
Share Post

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது தலைமையில் தான் பாகிஸ்தான் அணி 1992-இல் உலகக்கோப்பையை வென்றது. இவர் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு தெரிக்-எ-பாகிஸ்தான் என்ற அரசியல் கட்சியை துவக்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். பாகிஸ்தானின் வளர்ந்துவரும் கட்சியாக இவரது கட்சி உள்ளது. இவர் தனது ஆன்மீக ஆலோசகரான புஷ்ரா மனேகாவை லாகூரில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு மூன்றாவது திருமணமாகும்
இதற்கு முன் 1995-இல் ஜெமிமா கோல்ட் ஸ்மித்தை திருமணம் செய்தார். 9 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை 2004-ஆம் ஆண்டு விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்தது.
பின்னர், தொலைக்காட்சி தொகுப்பாளினி ரேஹம் கானை திருமணம் செய்தார். இந்த திருமணம் 10 மாதங்களே நீடித்தது. இதையடுத்து தற்போது அவர் தனது ஆலோசகர் புஷ்ராவை திருமணம் செய்துள்ளார்.