Home » உலகச் செய்திகள் » கனடியப் பிரதமரை அவமானப்படுத்திய மோடி

கனடியப் பிரதமரை அவமானப்படுத்திய மோடி

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ முதன்முறையாக ஏழு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் குடும்பத்துடன் வந்திரங்கிய அவரை, விவசாயத்துறை இணையமைச்சர் கஜேந்திரசிங் சேகாவத் வரவேற்றார். அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமையன்று ஆக்ராவிலுள்ள தாஜ்மாஹாலையும், திங்களன்று அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தையும், ட்ரூடோ அவரது குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்தார்.

👤 Saravana Rajendran20 Feb 2018 3:02 PM GMT
கனடியப் பிரதமரை அவமானப்படுத்திய மோடி
Share Post

இந்த மூன்று நாள்களில் மோடி, அவரைச் சென்றுப் பார்க்கவில்லை. மேலும், அந்தந்த மாநில முதல்வர்களும் ரூடோவுக்கு உரிய வரவேற்பு அளிக்கவில்லை. பொதுவாக, ஒரு நாட்டின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களைப் மோடி, விமான நிலையத்துக்குச் சென்று ஆரத்தழுவி வரவேற்பது வழக்கம். இந்தமுறை, ரூடோவைப் புறக்கணித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பேரினவாதத்தை எதிர்ப்பவர்கள் மோடிக்கு எதிரியா?
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை ஓர் இனப்படுகொலை என்று கனடாவின் ஒன்டாரியோ மாகாண பாராளுமன்றத்தில், கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் நடைபெற்ற சீக்கிய உரிமைப்போராட்டம் தொடர்பான கூட்டங்களில் டூடோவின் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
மேலும் சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழக்கத்தை டோனால்ட் டிரம்ப் முன்வைத்த போது, சிறிதும் தயங்காமல் கனடா அனைவருக்காகவும் திறந்திருக்கிறது என்று துணிச்சலுடன் குரல் கொடுத்தார் கனடிய பிரதமர் ரூடோ, ஒருவேலை கனடிய பிரதமருடன் நெருக்கம் காட்டினால் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற ஒரு பயத்தால் இதுவரை ருடோவை மோடி சந்திக்காமல் தவிர்த்து இருக்கலாம் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
முக்கியமாக பேரினவாத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா பெரும் ஆதரவு அளித்தே வருகிறது, கனடாவின் இந்த கொள்கை வலதுசாரி அமைப்புகளுக்கு வெறுப்பை வரவழைத்துள்ளது, வலதுசாரி அமைப்புகளுக்கு ஆண்டான் அடிமைத்தனம் காலம் காலமாக இருக்கவேண்டும், எங்கெல்லாம் முதலாளித்துவமும் பாசிசமும் உள்ளதோ அங்கெல்லாம் பேரினவாதம் தோன்றுகிறது. இப்பேரினவாதம் உயிர்களை துச்சமாக மதித்து அடிமைத்தனத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சியும், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் ஆட்சியும் இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆகும்.
கனடா போன்ற நாடுகள் பேரினவாதத்தால் பாதிக்கபடும் மக்களுக்கு கருணை காட்டும் போது பாசிச சக்திகளுக்கு கோபம் எழுத்தானே செய்யும் இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் கனடிய பிரதமரை மோடி இதுவரை சந்திக்காததற்கு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்