Home » உலகச் செய்திகள் » சபர்மதி ஆசிரமதில் கனடிய பிரதமர் குடும்பம்

சபர்மதி ஆசிரமதில் கனடிய பிரதமர் குடும்பம்

இந்தியா வந்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ருடோ குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்டார். அதன் பிறகு பிரபல கோவிலான சுவாமி நாராயண் அக்ஷர்தாம் சென்று பார்வையிட்டார்.

👤 Saravana Rajendran20 Feb 2018 3:26 PM GMT
சபர்மதி ஆசிரமதில் கனடிய பிரதமர் குடும்பம்
Share Post

இந்தியா வந்துள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடா, தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை காலை குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு வந்தார். இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்த அவர்கள், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டனர். அûத் தொடர்ந்து, ஆசிரமத்தில் காந்தி வாழ்ந்த ஹிருதய் குஞ்ச் இல்லத்துக்குச் சென்று அவர்கள் பார்வையிட்டனர். அந்த இல்லத்தில் தங்கியிருந்தபடிதான் காந்தி, அஹிம்சை போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஆசிரமத்தில் உள்ள காந்தியின் ராட்டையில் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோஃபி மற்றும் குழந்தைகள் ஆகியோர் நூல் நூற்பதில் ஆர்வம் காட்டினர். பின்னர், அங்கிருந்து சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டனர். "இந்தக் கோயில் அமைதிக்கான இடம்' என்று அங்குள்ள பதிவேட்டில் எழுதி ஜஸ்டின் ட்ரூடோ கையெழுத்திட்டார்.
முன்னதாக, கனடா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரை கோயில் குருக்கள் பூங்கொத்துகளைக் கொடுத்து வரவேற்றனர்.
: முன்னதாக, ஆமாதாபாதில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றினார். அப்போது, உலக நாடுகள், உலகமயமாக்கலை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்