Home » உலகச் செய்திகள் » போராளிகள் மீது தாக்குதல் என்ற பெயரில் பொதுமக்களைக் கொன்ற சிரிய அரசு

போராளிகள் மீது தாக்குதல் என்ற பெயரில் பொதுமக்களைக் கொன்ற சிரிய அரசு

சிரியாவில் போராளிகளின் கட்டுபாட்டுப் பகுதியில் அரசுப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொது மக்கள் 100 பேர் பலியாகினர்.

👤 Saravana Rajendran20 Feb 2018 3:49 PM GMT
போராளிகள் மீது தாக்குதல் என்ற பெயரில் பொதுமக்களைக் கொன்ற சிரிய அரசு
Share Post

சிரியா மனித உரிமை கண்காணிப்பு குழு கூறும்போது, சிரியாவில் கிழக்குப் பகுதியான கவுடாவில் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் 100 பேர் பலியாகினர். அதில் 20 பேர் குழந்தைகள்"என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.இதில் இதுவரை 400,000 பேர் பலியாகியுள்ளனர்.