Home » உலகச் செய்திகள் » மொண்டெனேகுரோ-வின் அமெரிக்க தூதரம் தாக்குதலுக்கு உள்ளானது.

மொண்டெனேகுரோ-வின் அமெரிக்க தூதரம் தாக்குதலுக்கு உள்ளானது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொண்டெனேகுரோ-வில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran22 Feb 2018 3:39 PM GMT
மொண்டெனேகுரோ-வின் அமெரிக்க தூதரம் தாக்குதலுக்கு உள்ளானது.
Share Post

2006 மே 21இல் புதிதாக உருவான நாடு மொண்டேகுரோ- இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இங்குள்ள சிறுபான்மை அல்பேனிய மொழி பேசும் மக்களுக்கும் பெரும்பான்மை போஸ்னிய மக்களிடையே மோதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் இந்த மோதல்களை முடிவுக்கொண்டுவர ஜெர்மன் முயற்சி செய்தது, ஆனால் அமெரிக்க தலையீட்டின் காரணமாக ஜெர்மன் தனது முயற்சியில் இருந்து பின்வாங்கியது. இந்த நிலையில் தலைநகரான பொண்டகோரிக்கா-வில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் கையெறிகுண்டுவீசிய நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் பின்னர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினான்.
இந்த தாக்குதலையடுத்து தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தாக்குதலில் வெடிக்குண்டை வெடிக்கச்செய்த நபர் மரணமடைந்தார். மற்ற யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அமெரிக்க தூதரகப்பகுதியை மொண்டோகுரோ ராணுவம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது.