Home » உலகச் செய்திகள் » குடியரசுத்தலைவர் மாளிகையில் ரூடோவிற்கு வரவேற்பு

குடியரசுத்தலைவர் மாளிகையில் ரூடோவிற்கு வரவேற்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமருக்கு ஜஸ்டினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கலாச்சாரமுறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

👤 Saravana Rajendran23 Feb 2018 9:52 AM GMT
குடியரசுத்தலைவர் மாளிகையில் ரூடோவிற்கு வரவேற்பு
Share Post

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர், தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர், காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். டெல்லியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதனிடையே கனடா பிரதமருக்கு மத்திய அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
கனடா பிரதமரை, மோடி வரவேற்கவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் மற்றும் அவரது குடும்பத்தை பிரதமர் மோடி வரவேற்றார்.
இதை தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டினை மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.