Home » உலகச் செய்திகள் » மீண்டும்(வேதாளம்) டிரம்ப் முருங்கை ஏறியது

மீண்டும்(வேதாளம்) டிரம்ப் முருங்கை ஏறியது

அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பணியாற்ற செல்லும் வெளிநாட்டவர்க்கு வழங்கப்படும் எச்1பி விசா முறையை ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

👤 Saravana Rajendran23 Feb 2018 3:29 PM GMT
மீண்டும்(வேதாளம்) டிரம்ப் முருங்கை ஏறியது
Share Post

அதிபர் ட்ரம்ப் தன்மீது அரசியல் விமர்சனங்கள் எழும் போது அதை மடைமாற்ற அவ்வப்போது முன்னுக்குப் பின் முடிவுகளை எடுப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் தற்போது மீண்டும் எச்1பி விசாமுறையை கடுமையாக்கியுள்ளார்.
தான் அதிபராக பொறுப்பேற்றது முதல் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை தருவது போன்ற திட்டங்களை முன்வைத்து வருகிறார். இதன் முதற்கட்டமாக வெளிநாட்டில் அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எச்1பி விசாவிற்கு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
அமெரிக்க குடியுரிமையான கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தால், அது வரை எச்ஃபி விசாவை நீட்டிக்க வழங்கப்பட்டிருந்த வாய்ப்பிற்கும் சமீபத்தில் ட்ரம்ப் தடை விதித்தார். இந்நிலையில் எச்1பி விசா வழங்குவதற்கான நடைமுறைகளை கடுமையாக்கி நேற்று ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மூன்றாவது நபரின் பணியிடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக அவர் பணியாற்றும் காலத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து மீண்டும் விசா பெற வேண்டும் என்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய அறிவிப்பு வெளிநாடுகளில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக அய்டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கே கடுமையான பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில் இருந்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் எச்1பி விசாவை பயன்படுத்தியே அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர். அமெரிக்கா வழங்கும் மொத்த எச்1பி விசாவில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் தங்கி உயர் கல்வி பயிலவும், பணியாற்றவும் எச்1பி விசா வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை வழங்கப்படும் இந்த விசாவானது நிரந்தரமாக தங்கும் கிரின்கார்டு கிடைக்கும் வரை விசாவை நீட்டித்து பணியாற்றும் நடைமுறை இதுவரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு இந்த விசாமுறையை எளிமைப்படுத்துவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் டிரம்ப் வெற்றியின் பின்னால் ரஷ்யா இருப்பதற்கான விசாரணைகள் அதிதீவிரமாக முடுக்கிவிட்டு இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மீண்டும் தான் அமெரிக்கார்களுக்கு முன்னுரிமைதருபவன் என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.