Home » உலகச் செய்திகள் » வினாடிகளில் ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலதிகாரி

வினாடிகளில் ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலதிகாரி

எகிப்து நாட்டில் மூன்றாவது மாடியில் இருந்து தவறிவிழுந்த ஐந்து வயது சிறுவனை போலீஸ் அதிகாரி ஒருவர் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

👤 Saravana Rajendran23 Feb 2018 3:31 PM GMT
வினாடிகளில் ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலதிகாரி
Share Post

எகிப்து நாட்டின் ஆஸியட் பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் குடியிருப்பின் மூன்றாவது மாடியின் பால்கனியில் தொங்கியவாறு இருந்துள்ளான். அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கினர்.
சக காவல் அதிகாரி ஒரு போர்வையை எடுத்து சிறுவனை தாங்கிப்பிடிப்பதற்காக தயார் செய்தார். மற்றொரு அதிகாரி அருகில் உள்ளவர்களை உதவவருமாறு அழைக்க சென்றார். மூன்றாவது அதிகாரி சிறுவனுக்கு நேராக கீழே நின்று பிடிக்க தயாரானார். அப்போது அந்த சிறுவன் கைதவறி கீழே விழுந்தான்.
நல்ல வேளையாக அந்த சிறுவனை மூன்றாவது அதிகாரி தாங்கிப்பிடித்தார். இதனால் இருவரும் கீழே விழுந்தனர். அந்த சிறுவனை காவல் அதிகாரி தாங்கிப்பிடித்ததால் சிறுவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அந்த போலீஸ் அதிகாரிக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிறுவனை காப்பாற்றிய காவல் அதிகாரிகளின் மீட்புப்பணிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளது. அதைப் பார்த்த பலரும் அந்த காவல் அதிகாரியை பாராட்டி வருகிறார்கள்.